குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்த உத்தரவு அதிகாரிகளால் காற்றில் பறந்தது

குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்த உத்தரவு அதிகாரிகளால் காற்றில் பறந்தது
X

கனிமவளங்களை கடத்தி செல்லும் லாரி

குமரியில் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை மதிக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனிம வளங்கள் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் அனுமதி உள்ள வாகனங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வழிதடங்கள், இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது கனிம வளங்கள் கடத்தல், கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகள், அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்காணிக்க வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆனால் அதிகாரிகள் ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல், கண்காணிப்பு குழு அமைக்காமல் கனிம வளம் கடத்தலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தினமும் 300 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் அனுமதி இன்றி களியல் காவல் நிலையம் வழியாக நெட்டா சோதனை சாவடியை கடந்து கேரளாவிற்கு மீண்டும் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!