ஓணம் பண்டிகை: பூக்களின் விலை 3 மடங்கு அதிகரிப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

ஓணம் பண்டிகை: பூக்களின் விலை 3 மடங்கு அதிகரிப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
X

தோவாளை மலர் சந்தை.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமரியில் மூன்று மடங்காக அதிகரித்த பூக்களின் விலை மற்றும் விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி.

கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருவோண பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது, அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி ஆவணி மாதம் வரும் ஓணம் நட்சத்திரம் வரை உள்ள 10 நாட்கள் கொண்டாடப்படும்.

இந்த பண்டிகையின் போது தங்களை ஆட்சி செய்த மாமன்னர் மகாபலி சக்கரவரத்தி தங்கள் வீடுகளுக்கு வந்து அருளாசி வழங்குவார் என்பது கேரளா மக்களின் நம்பிக்கை.

அதன் படி இந்த 10 நாளும் கேரளா மக்கள் தங்கள் வீடுகளின் முன் பல்வேறு மலர்களால் அத்தப்பூ கோலம் போட்டு மன்னர் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்பார்கள். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாட கேரள அரசு தடை விதித்திருந்தது.

இந்த ஆண்டும் இரண்டாம் அலை கொரோனா கேரளாவில் அதிகரித்து வருவதால் பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்துள்ள கேரளா அரசு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டு ஓணம் பண்டிகையை கொண்டாட அனுமதி அளித்துள்ளது.

அதன் படி கேரளாவில் நாளை திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது, மேலும் வரலட்சுமி விரதம், சுமங்கலி பூஜைகள் இன்று நடைபெறும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விற்பனை கலை கட்டி உள்ளது.

அதே நேரத்தில் பூக்களின் விலையும் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது, அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது 1,600 ரூபாய்க்கும் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ கிலோ 1,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று அனைத்து பூக்களின் விலையும் 3 மடங்கு அதிகரித்து உள்ளது, பூக்களின் விலை உயர்ந்து உள்ள நிலையில் விற்பனையும் அதிகரித்து உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil