குமரியில் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த பழைய வாகனங்கள் ஏலம்

குமரியில் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த பழைய வாகனங்கள் ஏலம்
X

கோப்பு படம் 

குமரியில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் தேங்கியிருந்த பழைய வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையங்கள் மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைப்பற்றப்பட்ட யாரும் உரிமைக் கோராத நான்கு சக்கர வாகனங்கள் 12, மூன்று சக்கர வாகனங்கள்-8, இரண்டு சக்கர வாகனங்கள்-1081 ஆக மொத்தம் 1101 வாகனங்கள் நாகரகோவிலில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

ஏலத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஏலத்தில் பங்கேற்போர் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில், சமூக இடைவெளியுடன் நாற்காலிகள் அமர்த்தப்பட்டனர். இன்று காலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மேற்பார்வையில் ஏலம் தொடங்கியது. ஏலத்தில் பங்கேற்றவர்களிடமிருந்து ஆதார் கார்டு, குடும்ப அட்டை நகலுடன் காப்பு தொகையாக ரூபாய் 1000 /- பெறப்பட்டது. ஏலம் தொடர்ந்து நடைபெற்றது. பலரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Tags

Next Story