படிக்கச்சொன்ன கலைவாணர் பள்ளியை இடிக்கச் சொன்னதாரப்பா? : இது குமரி அதிர்ச்சி

படிக்கச்சொன்ன கலைவாணர்   பள்ளியை இடிக்கச் சொன்னதாரப்பா? : இது குமரி அதிர்ச்சி
X
படிக்க சொன்ன கலைவாணர் பள்ளியை இடிக்க சொல்லவில்லை. சிரிக்க சொன்னவர் சிதைக்க சொல்லவில்லை.

நாடகங்கள், பெரிய திரை மூலம் பொதுமக்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் அவர் பெயரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி கழிவறைகள் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் புதிதாக கட்டப்பட்டு கழிவறை பகுதிகளை சுற்றி இரும்பு கம்பிகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் பள்ளியில் நல்ல நிலையில் வலுவாக இருந்த மதில் சுவர்கள் உடைக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அனைத்தும் உடைக்கப்பட்டதோடு பள்ளியில் பல்வேறு பகுதியில் உள்ள நடைபாதையும் உடைக்கப்பட்டு காணப்படுகிறது.

மேலும் அரசு பள்ளி வாசலில் உள்ள பெயர் பலகையில் கலைவாணரின் படமும் சுரண்டி அளிக்கப்பட்டு காணப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கல்வியாளர்களை மட்டுமல்ல,இப்பகுதி பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது இந்த சம்பவம்.

படிக்காத மேதை காமராஜர் கல்வியை மதித்து தனக்கு கிடைக்காத கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று பள்ளிக்கூடங்களை கிராமங்கள்தோறும் திறந்தார். அப்படியான தலைவர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டிலா நாம் வாழ்கிறோம் என்று வெட்கப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil