வட மாநில தேர்தல் வெற்றி: குமரியில் பாஜகவினர் இனிப்பு வழங்கி காெண்டாட்டம்

வட மாநில தேர்தல் வெற்றி: குமரியில் பாஜகவினர் இனிப்பு வழங்கி காெண்டாட்டம்
X

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

4 வட மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பெற்றதை தொடர்ந்து குமரியில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் பஞ்சாப்பை தவிர மீதம் உள்ள 4 மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மையை பெற்றது.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா பேருந்து நிலையம் முன்பு கூடிய பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும், கோஷங்கள் எழுப்பியும் கொண்டாடினர்.

மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், பாஜக மாவட்ட பொருளாளர் முத்துராமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகக்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!