சுசீந்திரம் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சுசீந்திரம் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
X

குமரி சுசீந்திரம் கோவிலில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

குமரி சுசீந்திரம் கோவிலில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

2022 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

அதன் தொடர்ச்சியாக தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாகவும் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகவும் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள தானுமாலயன் சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் விநாயகர், ஆஞ்சநேயர், முருகன் சன்னதிகளில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர், அதன்படி வந்த பக்தர்கள் கொரோனா மற்றும் ஓமிக்கிரான் நோய் தொற்று அகன்று மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என கூறி பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil