குமரியில் புதுப்பொலிவுடன் புதிய உழவர் சந்தை பயன்பாட்டிற்கு வந்தது

குமரியில் புதுப்பொலிவுடன் புதிய உழவர் சந்தை பயன்பாட்டிற்கு வந்தது
X

அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் மயிலாடி பகுதியில் இருக்கும் உழவர்சந்தையை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கிவைத்தார்.

குமரியில் புதுப்பொலிவுடன் புதிய உழவர் சந்தை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் மயிலாடி பகுதியில் இருக்கும் உழவர்சந்தை புதுப்பொலிவுடன் தயார் செய்யப்பட்டது.

இதனை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அளித்தார்.

இதே போன்று நாகர்கோவில் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்பட உள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!