நோய் தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி அவசியம்: நாகர்கோவில் மாநகராட்சி

நோய் தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி அவசியம்: நாகர்கோவில் மாநகராட்சி
X

கோப்பு படம் 

நோய் தொற்று பரவலை தடுக்க, தடுப்பூசியை அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என, குமரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால், இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் அறிவுறுத்தி உள்ளது.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும், மூன்றாம் தவணை (39 வாரம்) தடுப்பூசிகளும் போடப்படுகிறது. இதனை தகுதி உடையவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags

Next Story