முன்விரோதம் காரணமாக அமமுக நிர்வாகியை கடத்தி மர்ம நபர்கள் தாக்குதல்

முன்விரோதம் காரணமாக அமமுக நிர்வாகியை கடத்தி மர்ம நபர்கள் தாக்குதல்
X

மர்ம நபர்களால் கடத்தி தாக்கப்பட்ட அமமுக நிர்வாகி லிவின்.

சமூக வலைதள பதிவு முன்விரோதம் காரணமாக அமமுக நிர்வாகியை கடத்தி தாக்கிய மர்ம நபர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலை தளங்களில் பதிவு போட்டதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக லிவின் என்ற அமமுக மாணவரணி கிழக்கு மாவட்ட துணை செயலாளரை நாகர்கோவிலில் இருந்து காரில் நெல்லைக்கு கடத்தி சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படுகாயத்துடன் உயிர் பிழைத்த அமமுக நிர்வாகி லிவின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து வடசேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், விசாரணையில் ரவுடி கும்பலுடன் அரசியல் முக்கிய நபர்களின் மகன்கள் நாகர்கோவிலில் ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்த லிபினை வலுக்கட்டாயப்படுத்தி காரில் ஏற்றி கடத்தி நெல்லை மாவட்டத்தில் கொண்டு சென்று அங்கு கடுமையாக தாக்கி மீண்டும் நாகர்கோவிலில் கொண்டு விட்டதாக தெரிகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!