சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசுரனை வதம் செய்த முத்தாரம்மன்

சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசுரனை வதம் செய்த முத்தாரம்மன்
X
முத்தாரம்மன் மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சி
குமரி தசராவில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசுரனை முத்தாரம்மன் வதம் செய்யும் காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

நாடு முழுவதும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த நவராத்திரி விழாவின் பத்தாவது நாள் விஜயதசமி விழாவாக கொண்டாடப்படுகின்றது, இந்த நாளில்தான் அதர்மத்தை போதித்து வந்த மகிஷாரனை தேவி வதம் செய்ததாக கூறப்படுகின்றது.

அதன்படி குலசேகரபட்டினம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மைசூரு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூரசம்ஹார விழா நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக குமரியின் குலசேகரபட்டினம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற புலவர் விளை முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

முன்னதாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய தேவி முத்தாரம்மன் சூரனுடன் போர் செய்து கோவிலை சுற்றி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சூரனை எதிர்கொண்டு வந்தது மகிஷாசுரனை வதம் செய்த காட்சியை வழிநெடுகிலும் கூடி இருந்த பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!