விபத்தில் சிக்கிய கன்றுகுட்டியை காப்பாற்ற பாேராடிய தாய்ப்பசு: நெகிழ வைத்த சம்பவம்

விபத்தில் சிக்கிய கன்றுகுட்டியை காப்பாற்ற பாேராடிய தாய்ப்பசு: நெகிழ வைத்த சம்பவம்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்காேவில் செட்டிகுளம் பகுதியில் வாகனம் மாேதியதில் சாலையில் துாக்கி வீசப்பட்ட கன்றுக்குட்டி.

வாகனத்தில் அடிபட்ட கன்று குட்டியை கண்டு கதறிய தாய் பசுவின் பாச போராட்டம் கல் நெஞ்சையும் கரைய செய்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் கன்று குட்டியுடன் பசுமாடு வந்து கொண்டு இருந்தது, அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று கன்று குட்டி மீது மோதியதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட கன்றுக்குட்டி வலியால் துடித்தது.

அப்போது கன்றுக்குட்டி துடிப்பதை பார்த்த தாய் பசு அதனை சுற்றி சுற்றி வந்ததோடு அங்கு நின்றவர்களை பார்த்து சப்தம் போட்டு உதவிக்கு அழைத்தது, இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கால்நடை மருத்துவர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவ குழு கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளித்தனர். அதுவரை கற்றுக்குட்டி அருகிலேயே கண்ணீர் மல்க நின்ற தாய் பசு சிகிச்சை தொடங்கியதும் பதற்றத்துடன் அங்கும் இங்கும் அழுது கொண்டே சுற்றி சுற்றி வந்தது.

தன் பிள்ளை அடிபட்டு உயிருக்கு போராடுவதை கண்ட தாய் பசு செய்வது அறியாமல் கண்ணீருடன் சுற்றிய தாய்ப்பசுவின் பாசம் கல் நெஞ்சையும் கரைய செய்யும் வகையில் அமைந்தது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்