நாகர்கோவிலில் தாலிக்கு தங்கம்- அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்

நாகர்கோவிலில் தாலிக்கு தங்கம்- அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
X

நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை வழங்கினார்.

குமரியில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டமான படித்த பட்டதாரி ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் திட்டம் தற்போது உள்ள தி.மு.க. அரசாலும் தங்கு தடையின்றி கொடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு இரண்டாவது கட்டமாக தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன்மூலம் 800 பயனாளிகள் பயன்பெற்ற நிலையில் அவர்களுக்கு தலா 8 கிராம் தங்கமும் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டன.

Tags

Next Story