மண்டைக்காடு கோவில் கொடைவிழா ஒடுக்கு பூஜையுடன் நிறைவு: பக்தர்கள் தரிசனம்

மண்டைக்காடு கோவில் கொடைவிழா ஒடுக்கு பூஜையுடன் நிறைவு: பக்தர்கள் தரிசனம்
X

மண்டைக்காடு கோவில் 10 நாள் கொடைவிழா பிரசித்தி பெற்ற ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது.

மண்டைக்காடு கோவில் 10 நாள் கொடைவிழா பிரசித்தி பெற்ற ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழும் பிரசித்தியும் பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், பழமை வாய்ந்த கோவிலாகவும் அமைந்துள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.

பெண்களின் சபரிமலை என்றழைக்கபடும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் இருமுடி கட்டி வந்து பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி கொடை விழா பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த கொடைவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே இந்த வருடத்திற்கான மாசி கொடை விழா கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கேரளா ஆகம வீதிகளின் படி பூஜைகள், வாகன பவனி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் இந்த வருட மாசி கொடைவிழா ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது.

Tags

Next Story