குமரியில் சொத்து பிரச்சனையில் தங்கையை அடியாட்களை விட்டு அடித்த அக்கா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகி லதா சந்திரன்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் அம்மு ஆன்றோ, இவர் முன்னாள் அமுமுக கட்சியின் நிர்வாகியாகவும் தற்போது அமமுக விலகி திமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவரது தங்கை லதா சந்திரன் இவர் அதிமுகவில் பேரூர் கழக செயலாளராக இருந்து வருகிறர், மேலும் அப்பகுதியில் உள்ள கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் அக்கா - தங்கை இருவருக்கும் இடையை சொத்து பிரச்னையின் காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே நேற்று நள்ளிரவு நேரத்தில் லதா சந்திரன் வீட்டின் முன்பாக திடீரென 20 க்கும் மேற்பட்டோர் போலீசாரின் முன்னிலையில் லதா சந்திரன் வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த அவரது கணவர், மகன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேலும் வீட்டின் வெளியே வந்தும் தகராறு செய்து பெண் என்றும் பாராமல் போலீசாரின் முன்னிலையில் லதா சந்திரனை தாக்கியுள்ளனர். இதனால் நிலைகுலைந்த அதிமுக நிர்வாகி லதா சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து லதா சந்திரன் கூறுகையில் திமுக கட்சி நிர்வாகியான அம்மு ஆன்றோவிற்கு தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துணை போவதாகவும், திமுக ஆட்சி அமைந்த பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் துணையுடன் தன் குடும்பத்தை கொலை செய்யும் நோக்குடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே அதிமுக பிரமுகர் குடும்பம் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu