குமரியில் முடங்கிய சுற்றுலா தலங்கள் - வியாபாரிகள் தவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் முடங்கியதால் வியாபாரிகள் பரிதவித்து வருகின்றனர்.
கொரோனா 2 ம் அலையை தவிர்க்க பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை தமிழகஅரசு விதித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லவும் அதனை பார்வையிடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பொதுவாக உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தரும் நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது.
இந்நிலையில் தற்போது சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கன்னியாகுமரி சுற்றுலா தலம் ஆள் ஆரவாரமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக நடைபாதை, ஏலம் மூலமாக பெறப்பட்ட கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். தினசரி வியாபாரத்திலேயே தங்களது குடும்பம் பிழைக்கும் நிலையில் ஏற்கனவே கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில் இப்போது சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu