குமரியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்
X
By - A. Ananthakumar, Reporter |21 July 2021 6:00 PM IST
குமரியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட 25 பேர் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த முன்னாள் தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட 10 பேரை கட்சியின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்ததாக கூறி அக்கட்சி தலைமை நீக்கியது.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் உட்பட 25 பேர் இன்று திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். ஏற்கெனவே, கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவில் சலசலப்புகள் நிலவி வரும் நிலையில், கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் உள்பட 25 நபர்கள் ஒரே நாளில் திமுகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில், மேலும் பலர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது, அரசியல் பார்வையாளர்களை கவனிக்க வைத்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu