குமாரகோவில் முருகனுக்கு காவடி வழிபாடு செய்த போலீசார் மற்றும் பொதுப்பணி துறையினர்

குமாரகோவில் முருகனுக்கு காவடி வழிபாடு செய்த போலீசார் மற்றும் பொதுப்பணி துறையினர்
X

முருகன் கோவிலுக்கு காவடி எடுத்த்ட்ட காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர்.

குமாரகோவில் முருகனுக்கு குமரி போலீசார் மற்றும் பொதுப்பணி துறையினர் காவடி எடுத்து வழிபாடு செய்தனர்.

குற்றங்கள் குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ காவல்துறை சார்பிலும், மழை வளம் பெருகி விவசாயம் சிறக்க பொதுப்பணித்துறை சார்பிலும் குமாரகோவில் முருகனை வேண்டியும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்து கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை காவடி எடுத்து வழிபடுவது வழக்கம்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தக்கலை போலீஸ் நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக காவடி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். இந்நிலையில் இன்று கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குமாரகோவிலுக்கு பாரம்பரிய காவடி ஊர்வலம் நடந்தது.

தக்கலை போலீஸ் நிலையம் சார்பில் பால்குடம் மற்றும் 2 புஷ்ப காவடிகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.போலீஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதே போன்று பொதுப்பணித்துறை சார்பில் புஷ்ப காவடி எடுத்து செல்லப்பட்டு குமாரகோவில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!