பொதுமக்களுக்காக மொபைல் சேவை: அசத்தும் குமரி போலீசார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் வகையில், குமரி மாவட்ட காவல்துறை சார்பில், வாட்ஸ் அப்புடன் கூடிய மொபைல் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறியதாவது: கொரோனா தொற்று குறித்த தீர்வுகளுக்காக, பொதுமக்களின் வசதிக்காக 7010363173 என்ற காவல்துறை வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த எண் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியை பெற முடியும். மாவட்டத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் 30 நிமிடங்களுக்கு உள்ளாக காவல்துறையின் சேவையை பெற முடியும்.
அதேபோன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொது இடத்தில் கூட்டம் இருப்பின், அது குறித்து தெரியப்படுத்தினால் காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கவும் இந்த மொபைல் எண் பயனுள்ளதாக இருக்கும். பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu