குமரியில் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் உடல் மீட்புப்பணி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகவும், அணைகளில் இருந்து வரலாறு காணாத அளவில் திறந்து விடப்பட்ட உபரிநீர் காரணமாகவும் காட்டாற்று வெள்ளம் உருவாகியது. ஏற்கனவே கடந்தமுறை பெய்த கனமழையால் கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், காலனி செல்லும் பாலம், காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, அதன்பின்பு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
தற்போது பெய்த கனமழை காட்டாற்று வெள்ளம் காரணமாக, அந்த தற்காலிக பாலமும் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது வாளையத்துவயல் பகுதியை சேர்ந்த சித்திரவேல்(39) என்பவர் எதிர்பாராதவிதமாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமானார். அவரை அப்பகுதியினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் கீரிப்பாறை சப்பாத்து பாலம் பகுதியில், புதருக்குள் அழுகிய நிலையில் இன்று சித்திரவேல் உடல் மீட்கப்பட்டது. உடலை கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். காட்டாற்று வெள்ளத்தில் ரப்பர் தோட்ட தொழிலாளி இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu