சுதந்திர தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
X
சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டது.

நாடு முழுவதும் நாளை சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது, இந்நிலையில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. மேலும் பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் முக்கிய சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேருந்துநிலையம், சுற்றுலா தலங்கள், மற்றும் ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தில் போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுனர்களின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். மேலும் பயணிகள் கொண்டுவரும் பொருட்களை சோதனை செய்த பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture