குமரியில் அரசு பேருந்துகளின் போக்குவரத்து தொடங்கியது
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்ததை கருத்தில் கொண்டு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு 50 சதவிகித பயணிகளுடன் பேருந்தை இயக்க உத்தரவிட்டது.
அதன் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளின் இயக்கம் இன்று காலை 6 மணி முதல் தொடங்கியது.மாவட்டத்தில் மொத்தம் 12 பணிமனைகளில் உள்ள 788 பேருந்துகளில் 520 பேருந்துகள் முதற்கட்டமாக இயக்கப்பட்டன.
பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்து இருந்த நிலையில் 35 நாட்களுக்கு பின்னர் இயக்கப்பட்டு பேருந்துகளில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் முக கவசம் அணிந்து வந்த பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu