நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - தயார் நிலையில் கன்னியாகுமரி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - தயார் நிலையில் கன்னியாகுமரி
X

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில், பலத்த பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் தனி வாகனங்களில் வாக்கு இயந்திரங்களை எடுத்து சென்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவுற்று, இன்று காலை வாக்குப்பதிவுக்கு கன்னியாகுமரி மாவட்டம் தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில், 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்று உள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், நாகர்கோவில் மாநகராட்சிக்கான வாக்குபதிவிற்கு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 233 வாக்கு சாவடிகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் தனி வாகனங்களில் இதனை எடுத்து சென்றனர்.இதே போல் 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்காக மாவட்டம் முழுவதும் உள்ள 1324 வாக்கு சாவடிகளுக்கும் அந்தந்த உள்ளாட்சி அலுவலகத்தில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

அதன்படி அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்று, இன்று காலை நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது.

Tags

Next Story