குமரியில்தொடரும் கனமழையால் வீடுகளை சூழ்ந்தது மழை வெள்ளம்.

குமரியில்தொடரும் கனமழையால் வீடுகளை சூழ்ந்தது மழை வெள்ளம்.
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை 300 க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரில் தத்தளித்து வருகின்றன,

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் பெய்து வரும் மிக கனமழை காரணமாக அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் வீடுகள் மற்றும் விலைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதன் காரணமாக மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரில் தத்தளித்து வருகின்றன, இதனிடையே நாகர்கோவில் மாநகரத்திற்கு உட்பட்ட புத்தேரி, பறக்கின் கால்வாய் பகுதியில் உள்ள குளம் உடைந்து தண்ணீர் பெருமளவில் வெளியேறியதால் சுமார் 80 க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

யாஸ் புயல் கரையை கடந்தால் மழை தீரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பலத்த காற்றுடன் மழை தொடர்வதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!