சாட்டை துரைமுருகனுக்கு அக். 25 வரை நீதிமன்றக்காவல்
சாட்டை துரைமுருகனை நாங்குநேரி சிறையில் அடைக்க அழைத்து சென்ற போலீசார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து, கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகக்கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் கட்சி சார்பில், நேற்று மாலை தக்கலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரும், யூ டியூப்பருமான சாட்டை துரைமுருகன், தமிழக முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து, அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார், சாட்டை துரைமுருகனை கைது செய்தனர்; பின்னர், பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தீனதயாளன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அவரை, வரும் 25 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, சாட்டை துரைமுருகனை நாங்குநேரி சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu