கன்னியாகுமரி: ஜீவானந்தம் நினைவு தினத்தையொட்டி அரசு சார்பில் மரியாதை
நாகர் கோவிலில் ஜீவா உருவபடத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூதப்பாண்டி எனும் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் ஜீவானந்தம்.
தன் வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்த அவர் தொழிலாளர்கள் நலனுக்காக போராடியதோடு பொதுவுடைமை சிந்தனைகளையும் வளர்த்தார்.
தன் வாழ்நாளில் உடுத்த துணிக்கு மாற்று துணி இல்லாமல் ஏழையாகவே வாழ்ந்து மறைந்த ஜீவானந்தத்தின் புகழை போற்றும் வகையில் அவர் பிறந்து வளர்ந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் தமிழக அரசு அவருக்கு மணிமண்டபம் கட்டி அழகு பார்த்தது.
இந்நிலையில் ஜீவானந்தம் நினைவு தினத்தையொட்டி நாகர்கோவில் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உள்ளிட்டோர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu