ஜெயலலிதா நினைவு நாள் - குமரி மாவட்ட அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதா நினைவு நாள் - குமரி மாவட்ட அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி
X

ஜெயலலிதா நினைவுதினத்தை முன்னிட்டு, அஞ்சலி செலுத்திய அதிமுகவினர். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு, குமரி மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஜெயலலிதா திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதிகளில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு, அதிமுகவினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும், தீப ஆராதனை காட்டியும் மரியாதை செலுத்தினர்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான பச்சைமால் உட்பட ஏராளமான கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!