வீடு புகுந்து கொலை மிரட்டல் - 8 பேர் மீது வழக்கு பதிவு

வீடு புகுந்து கொலை மிரட்டல் - 8 பேர் மீது வழக்கு பதிவு
X

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சீதப்பால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் இன்பராஜா. இவரது மகன் 23 வயதான அனீஷ்.

இவருக்கும் சீதப்பால் காலனியை சேர்ந்த முகர்ஜி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை முகர்ஜி தரப்பினர், அனீஸின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரது இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியதுடன், அனீசுக்கும், அவரது பாட்டிக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் முகர்ஜி உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!