சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் ரமேஷன் நாயருக்கு நினைவேந்தல்

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் ரமேஷன் நாயருக்கு  நினைவேந்தல்

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் ரமேஷன் நாயருக்கு நினைவேந்தல்

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் ரமேஷன் நாயருக்கு ஊர் மக்கள் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த குமாரபுரத்தில் மே 3, 1948 இல் பிறந்தவர் கவிஞர் ரமேஷன் நாயர், 18/6/2021 அன்று தனது 73 வது வயதில் கொரோனா காரணமாக மரணம் அடைந்தார்.

குமரி மாவட்டம் மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பும், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இசையும், இந்து கல்லூரியில் பொருளாதாரம் இளங்கலை பட்ட படிப்பும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

அகில இந்திய வானொலியில் பணியாற்றி எழுத்து ஆர்வம் காரணமாக விருப்ப ஓய்வு பெற்று தீவிர இலக்கிய பணியில் இறங்கிய இவர் சுமார் 50 புத்தகங்களை மலையாள இலக்கியத்திற்குத் தந்தவர். 1985 இல் " பத்தாமுதயம்" திரைப்படத்தில் நான்கு பாடல்கள் எழுதி திரையுலகிற்கு அறிமுகமானார், புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான கே.வி. மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன் இசைக்கு தொடக்க காலத்தில் பாடல்கள் எழுதினார்.

பின்னர் மலையாளத்தின் அத்தனை இசையமைப்பாளர்களோடும் தன் கவிதைகளோடு பயணித்தார், இளையராஜா இசைக்கு பாடல்கள் எழுதியது மறக்கமுடியாத அனுபவம் என்பார்.

இதுவரை 165 திரைப்படங்களில் 650 க்கு அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார், 2000 க்கு மேற்பட்ட பக்தி பாடல்கள் எழுதியுள்ளார். தனி ஆல்பங்களில் சுமார் 800 பாடல்கள் வந்துள்ளன, இவரின் முதல் கவிதை நூல் "கன்னிப் பூக்கள்" 1966 இல் வெளியாகியது.

சிலப்பதிகரம், திருக்குறள், பாரதியார் பாடல்களை மலையாளத்திற்கு மொழி பெயர்த்தார், அதற்காக கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி நடைபெற்ற கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் பாராட்டும் பரிசும் பெற்றார், அன்றைய முதல்வருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக தொடர்ந்து கலைஞரின் "தென்பாண்டி சிங்கம்" நூலையும் மலையாளத்தில் மொழி பெயர்த்தார்.

இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய அகாதமி விருதை 2018 இல் 'குருபவுர்ணமி" நூலுக்காகவும், கேரள அரசின் மாநில விருதையும், சிறந்த திரைப்பட பாடலுக்காக விருதையும், பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய விருதுகளையும் பெற்றவர்.

இதனிடையே அவர் பிறந்த குமாரபுரம் வீட்டு அருகாமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி அமுதசுரபி இலக்கிய இயக்கம், கன்னியாகுமரி மலையாள அட்சரலோகம் அமைப்புகள் இணைந்து நடத்தியது. நிகழ்வுக்கு அட்சரலோகம் அமைப்பின் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையேற்றார். கவிஞர்கள், தமிழ் ஆர்வளர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story