குமரியில் தடுப்பூசி போட்டால் தங்க நாணயம் பரிசு: மாவட்ட ஆட்சியர் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்.
கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்று கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக போடப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை நடைபெற்ற 4 தடுப்பூசி முகாம் மூலம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 306 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.
மேலும் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் மாவட்டத்தில் 66% பொதுமக்களே தடுப்பூசி போட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 33% பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும் ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம் மூலம் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் என மாவட்டம் முழுவதும் 570 சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே தமிழகத்திலேயே ஒரு புதிய முயற்சியாக தடுப்பூசி போடுபவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அதில் 22 பேருக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று உள்ள நிலையில் அதன் மூலம் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu