அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு - 4 வாலிபர்கள் கைது
X
By - A. Ananthakumar, Reporter |19 March 2022 6:00 PM IST
குமரியில், அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்தவர் உதயகுமார் (49), இவர் பார்வதிபுரம் பஸ் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பெருவிளை பகுதியை சேர்ந்த அஜித்குமார் ( 31 ), பள்ளிவிளையை சேர்ந்த பிரகாஷ் (26), மேல பெருவிளையை சேர்ந்த மிக்கேல் (36), திட்டுவிளை சேர்ந்த அஜித் (21 ) ஆகியோர் உதயகுமாரிடம் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.500 பறித்து சென்றனர்.
இது குறித்து உதயகுமார் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பணம் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu