சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழாவிற்கான கால்நாட்டு விழா

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழாவிற்கான கால்நாட்டு விழா
X

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில்.

குமரியில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி திருவிழாவிற்கான கால்நாட்டு விழா நடைபெற்றது.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகவும் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலாகவும் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள தாணுமாலய சுவாமி கோவில்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் மார்கழி பெரும் திருவிழா மற்றும் திருத்தேரோட்டம் சிறப்பு பெற்றது, இந்த திருவிழாவில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மார்கழி பெரும் திருவிழா வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 19ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டமும், அன்று நள்ளிரவு சப்தவர்ண நிகழ்ச்சியும், 20ஆம் தேதி சிறப்பு பெற்ற ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், மற்றும் பட்டிமன்றம், பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் மார்கழி திருவிழாவிற்கான கால்நாட்டு விழா இன்று நடைபெற்றது. பல்வேறு பூஜைகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!