குமரியில் அதிகரிக்கும் கொரோனா - பொதுமக்கள் கவலை

குமரியில் அதிகரிக்கும் கொரோனா - பொதுமக்கள் கவலை
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை உச்சம் அடைந்து படிப்படியாக குறைந்ததோடு, கடந்த இரண்டு மாதங்களாக நோய் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 வரை இருந்தது.

ஆனால், கடந்த இரண்டு நாட்களாக நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சம் அடைய செய்து உள்ளது. நாகர்கோவிலில், ஒரே குடும்பத்தை சேர்ந்த டாக்டர் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், டாக்டர் வீடு இருந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!