தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை சரிவு: வியாபாரிகள் கவலை

தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை சரிவு: வியாபாரிகள் கவலை
X
தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக குறைந்ததோடு வியாபாரமும் குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

மன்னர் காலம் தொட்டு புகழ் பெற்று திகழும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் செல்வது வழக்கம்.

மேலும் சுபமுகூர்த்த காலங்களிலும், விசேஷ காலங்களிலும் தோவாளை மலர் சந்தை கலை கட்டும். இந்நிலையில் ஆடி அமாவாசை நாளை நடைபெறும் நிலையில் பூ விற்பனை சரிவை சந்தித்து உள்ளது.

இந்த வருடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் புனித நீராட கோவில்கள் நீர்நிலைகள் பொதுமக்கள் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளதால் பூ விலை கணிசமாக குறைந்துள்ளது.

பூக்களின் விலை கணிசமாக குறைந்த நிலையில் விற்பனையும் மந்த நிலையில் உள்ளதால் பூ வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!