குமரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்: மாணவ, மாணவிகள் பங்கேற்பு

குமரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்: மாணவ, மாணவிகள் பங்கேற்பு
X

குமரியில் மாணவ மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடைபெற்றது.

குமரியில் மாணவ மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் இருந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடைபெற்றது.

போதை மனித வாழ்விற்கு எதிரானது, போதையால் ஆரோக்கியம் கெடுகிறது என்ற பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் வினியோகத்துடன் நடைபெற்ற இந்த ஜோதி ஓட்டத்தை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உட்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!