7 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் கண்காணிப்பாளர்

7 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் கண்காணிப்பாளர்
X
குமரியில் 7 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்து உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

உடல் வலிமை மற்றும் மன வலிமைகளை அதிகரிக்க தினமும் நடைப்பயிற்சி முக்கியத்துவமாக இருந்து வருகிறது. அந்த வகையில் உடற்பயிற்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், ஊர் காவல் படையினருடன் இணைந்து 7 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டர். இந்த நடைபயணம் நாகர்கோவிலில் உள்ள ஊர்காவல் படை தலைமை அலுவலகத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம் வழியாக பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி அடைந்து ஊர்க்காவல் படை தலைமை அலுவலத்தில் நிறைவுபெற்றது. இதனிடையே ஊர்காவல் படையினருடன் கலந்துரையாடிய காவல் கண்காணிப்பாளர் நிகழ்ச்சி நிறைவில் ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare