பக்தர் தவற விட்டு தங்க நகை: மீட்டுக் கொடுத்த காவல்துறை.

பக்தர் தவற விட்டு தங்க நகை: மீட்டுக் கொடுத்த காவல்துறை.
X

தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்.

குமரியில் திருவிழாவில் பக்தர் தவற விட்டு தங்க நகையை போலீசார் மீட்டு கொடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது காணிக்கை மாதா கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நடைபெற்று வரும் நிலையில், திருவிழாவின்போது குளச்சல் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவருடைய குழந்தையின் சுமார் அரை பவுன் செயின் தவறியது.

இது குறித்து பிரவீன் குமார் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் திருவிழாவின் போது அங்கு பணியில் இருந்த குளச்சல் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மரியநெல்சன் தங்க செயினை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதனையடுத்து செயினை தவறவிட்ட குழந்தையின் தந்தையான பிரவீன்குமாரை அழைத்து விசாரித்த போலீசார், அந்த செயின் அவருடையதுதான் என்பதை உறுதி செய்து அவரிடம் ஒப்படைத்தனர்.

குழந்தை தவறவிட்ட செயினை கண்டுபிடித்துக் கொடுத்த சிறப்பு சார்பு ஆய்வாளரை காவல்துறையினரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil