அடிப்படை வசதி இல்லை - குமரியில் போராட்டத்தில் குதித்த அரசு லேப் டெக்னீசியன் மாணவர்கள்.

அடிப்படை வசதி இல்லை - குமரியில் போராட்டத்தில் குதித்த அரசு லேப் டெக்னீசியன் மாணவர்கள்.
X
கொரானா நோயாளிகளை விட மோசமாக நடத்தப்படுவதாக குற்றம் சாத்திய மருத்துவ கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் இயங்கி வருகிறது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இங்கு லேப் டெக்னீசியன் 2 ஆண்டுகள் பட்டயப்படிப்பை சுமார் 120 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

குறிப்பாக லேப் டெக்னீசியன் மாணவ மாணவிகள் கொரானா நோயாளிகள் தங்கும் அறை அருகே தங்கவைக்கப்பட்டு உள்ளனர், அவர்களுக்கு முறையான உணவு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் காசு கொடுத்து தனியார் உணவகங்களில் இருந்து உணவு வாங்கி உண்ணும் நிலை உள்ளது, குடி தண்ணீர் மாஸ்க் போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் மாணவர்கள் மத்தியில் உள்ளது.

இது தொடர்பாக புகார்கள் அனுப்பினால் சான்றிதழ் வாங்க முடியாதபடி செய்துவிடுவதாக கல்லூரி நிர்வாகம் மிரட்டுவதாக கூறியும், கொரானா காலகட்டத்தில் கொரானா நோயாளிகளை விட தாங்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக குற்றம் சாத்திய லேப் டெக்னீசியன் மாணவர்கள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோணா நோயால் இறந்தவர் உடலை மழையில் நனைந்தபடி போட்டு வைத்து, அலட்சிய போக்கு மற்றும் முறையான சிகிச்சை இல்லாததால் அதிக மரணங்கள் என ஏற்கனவே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் மாணவர்களின் இந்த போராட்டம் மருத்துவக்கல்லூரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா