குடிநீர் தொட்டியில் குரங்குகள் உற்சாக குளியல்: கருணை காட்டிய பெண் கவுன்சிலர்

குடிநீர் தொட்டியில் குரங்குகள் உற்சாக குளியல்: கருணை காட்டிய பெண் கவுன்சிலர்
X
குமரியில் குடிநீர் தொட்டியில் உற்சாக குளியல் போட்டு குரங்குகள் செய்யும் சேட்டை வைரல் ஆனது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வன விலங்குகள் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கவும், தாகத்தை தீர்க்கவும் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தக்கலையை அடுத்த பத்மநாபபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள குரங்கு கூட்டம் அந்த பகுதியில் உள்ள கவுன்சிலர் ஷிபா என்பவரின் வீட்டு மாடியில் ஏறி, அங்கிருந்த குடிநீர் தொட்டியில் புகுந்து ஆனந்தமாக குளியல் போட்டு சேட்டை செய்தது.

இதை அவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது. மேலும் குரங்குகள் கூட்டமாக தனது வீட்டை ஆக்கிரமித்து இருந்தாலும் தண்ணீரில் துள்ளி குதித்து ஆனந்தம் அடைவதை கண்ட அவர் அதனை விரட்டாமல் கூடுதலாக வசதிகளை செய்து கொடுத்து இருப்பது பாராட்டும் வகையில் அமைந்தது.

Tags

Next Story