வேகமெடுக்கும் கொரோனா -கணக்கெடுப்பு பணி தீவிரம்

வேகமெடுக்கும் கொரோனா -கணக்கெடுப்பு பணி தீவிரம்
X

கொரோனா 2 ம் அலை வேகம் எடுத்து வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மூன்று இலக்க எண்ணை தாண்டி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.மாவட்டம் முழுவதும் நாளொன்றுக்கு 3500 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நிலைமையை சமாளிக்க அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து தடுப்பூசி மருந்துகள் வாங்கப்படுகின்றன.

மேலும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் தீவிரமடைந்து வரும் நிலையில், சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று காய்ச்சல் சளி உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story