நாகர்கோவில் பள்ளியில் 5 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு: தடுப்பு பணிகள் தீவிரம்

நாகர்கோவில் பள்ளியில் 5 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு: தடுப்பு பணிகள் தீவிரம்
X

நாகர்கோவில் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குமரியில் பள்ளியில் படிக்கும் 5 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தடுப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் நாகர்கோவில் கார்மல் பள்ளியில் படிக்கும் 5 மாணவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி மாநகராட்சி நல அலுவலர் தலைமையில் பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!