கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கொரோனா விழிப்புணர்வு - பொதுமக்களை கவர்ந்தது
குமரி மாவட்டத்தில் கிராமிய கலை நிகழ்ச்சியுடனான கொரோனா விழிப்புணர்வு பயணத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சம் அடைந்து குறைந்து வரும் நிலையில் தற்போது மாவட்டத்தில் 139 நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குமரிமாவட்டதுடன் இணைந்து உள்ள கேரளாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்தும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் 3 ஆவது அலையாக உருவெடுத்து வரும் நிலையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் குமரியில் தொடங்கியது.
அதன் படி குமரி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய வாகனப் பிரச்சார பயணம் இன்று தொடங்கப்பட்டது, கிராமிய இசை வாதியங்களுடன் நடைபெறும் இந்த விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணத்தை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
இந்த வாகன பிரச்சாரமானது பேருந்து நிலையங்கள், முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட மக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் நின்று கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu