தொடர்ந்து பெய்து வரும் மழை: குமரியில் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

தொடர்ந்து பெய்து வரும் மழை:  குமரியில் வெப்பம்  தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழை

நீண்ட நாட்களுக்கு பின் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குமரி மாவட்டத்தில்வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக கடும் வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. கடும் வெப்பம் காரணமாக பொதுமக்களும் வாகன ஒட்டிகளும் அவதியுற்று வந்த நிலையில் இன்று தொடர் மழை பெய்தது.நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவியது.நீண்ட நாட்களுக்கு பின்னர் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
சத்தியமங்கலத்தில் விசிக ஆர்ப்பாட்டம்...! அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள்..!