மத்திய அரசை கண்டித்து குமரியில் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை பிரச்சாரம்

மத்திய அரசை கண்டித்து குமரியில் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை பிரச்சாரம்
X

குமரியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தெருமுனை பிரச்சாரம் நடத்தினர்.

மத்திய அரசிற்கு எதிராக நடைபெறும் பந்த்தின் முன்னோட்டமாக குமரியில் தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் விரோதமான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதாக பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் அழைப்பு கொடுத்தன.

அதன் படி மத்திய அரசை கண்டித்து வரும் 27 ம் தேதி நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட இருக்கும் பந்திற்கு முன்னோட்டமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் தெருமுனை பிரச்சாரத்தை தொடங்கின.

அதன்படி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடமும் வர்த்தக நிறுவனங்களிலும் மற்றும் வீதி வீதியாக சென்றும் பொதுமக்களிடம் வழங்கி தெருமுனை பிரச்சாரத்தை நடத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!