ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் பலியான குமரி பாலன் நினைவு தினம் அனுசரிப்பு

ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் பலியான குமரி பாலன் நினைவு தினம் அனுசரிப்பு
X

 ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் பலியான குமரி பாலன் நினைவிடத்தில் இன்று மலரஞ்சலி செலுத்தினர்.

குமரிமாவட்டம் குமாரபுரம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் பலியான குமரி பாலன் நினைவு தினம் அனுசரிப்பு.

கடந்த 1993 ஆம் ஆண்டு சென்னையில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய குண்டு வெடிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த குமரி பாலன் பலியானார். அவரது உடல் குமரி பாலனின் சொந்த ஊரான குமரிமாவட்டம் குமாரபுரம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது சமாதியில் வருடம்தோறும் இந்து இயக்கங்கள் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று குமரி பாலனின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தினம் இந்து முன்னணி சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி அவரது சமாதிக்கு இந்து இயக்கங்கள் சார்பில் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!