முதல்வர் வருகை: குமரியில் 1200 போலீசார் பாதுகாப்பு

முதல்வர் வருகை: குமரியில் 1200 போலீசார் பாதுகாப்பு
X

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு குமரியில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ள சேத சீரமைப்பு பணிகள், சாலை பணிகள் போன்றவற்றை நேரில் பார்த்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவில், பேயன் குழி, குமாரகோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த நிலையில் முதல்வரின் வருகையால் நாகர்கோவில் முழுவதுமாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. மேலும் முதல்வர் வருகையை ஒட்டி மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் உட்பட முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகள் மற்றும் சாலையை மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை செய்தனர்.

Tags

Next Story
why is ai important to the future