/* */

குமரியில் ஒரே நாளில் 21 கனரக வாகனங்கள், 2466 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு

குமரியில் வாகன சோதனையில் ஒரே நாளில் 21 கனரக வாகனங்கள் மற்றும் 2466 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் ஒரே நாளில் 21 கனரக வாகனங்கள், 2466 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
X

போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் விசாரணை நடத்தும் போலீசார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள் அதிவேகமாக வருவதால் விபத்துகள் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.

மேலும், மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்வதால் விபத்துகள் அதிகரிப்பதாகவும் தெரியவந்தது.

இதேபோன்று, அதிவேகத்துடன் செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் கனிமவளம் கடத்தலில் ஈடுபடும் வாகனமாக இருப்பதாகவும் ஆய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அதிக பாரம் மற்றும் அதி வேகத்துடன் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்கை பகுதிகளிலும் போலீசாரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

அதன்படி நடைபெற்ற வாகன சோதனையில் ஒரே நாளில் அதிக பாரம் மற்றும் அதிவேகத்துடன் வந்த 21 கனரக வாகனங்கள் மற்றும் தலைக்கவசம் இல்லாமலும் உரிய ஆவணங்களும் இல்லாமலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஒட்டிய 2466 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

குமரியில் கடந்த ஒரு மாதத்தில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.

Updated On: 6 Aug 2021 3:56 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!