டயர் வெடித்ததால் தலைகீழாக கவிழ்ந்த கார்:இருவர் படுகாயம்.

விபத்தில் தலைகீழாக கிடைக்கும் கார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் இன்று பிற்பகல் வேகமாக சென்று கொண்டிருந்த காரின் டயர் திடீரென வெடித்ததால், நிலைதடுமாறி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
அப்போது மேம்பாலத்தில் சென்றுகொண்டு இருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதோடு உருண்டு தலைகீழாக கவிழ்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகனத்தில் இருந்தவர் என இருவர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடம் வந்த வடசேரி போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu