குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாெடர் கனமழையால் பாெதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குமரியில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பெய்த கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது.

கனமழையால் உருவான காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததில் 60 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மாவட்டம் முழுவதும் சுமார் 2500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு இருந்த நெல், வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் முற்றிலும் நாசமாயின.

கனமழையால் விவசாயிகளும் பொதுமக்களும் பெரும்பாதிப்பை சந்தித்த நிலையில் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையானது பெய்து வருகின்றது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாகர்கோவில், தக்கலை, ஆரல்வாய்மொழி, மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளில் இருந்து பெருமளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் திற்பரப்பு அருவி, தமரபரணி, கோதையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலையில் ஆற்றின் கரையோரம் இருக்கும் தாழ்வான பகுதிகளான திருவட்டார், பார்த்திபபுரம், வைக்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ள மாவட்ட நிர்வாகம் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இந்நிலையில் குமரியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!