தடுப்பூசி போடும் பிரிவில் முதல்வர் படம் -அகற்ற கூறி பாஜக வாக்குவாதம்

தடுப்பூசி போடும் பிரிவில் முதல்வர் படம் -அகற்ற கூறி பாஜக வாக்குவாதம்
X
அரசு மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிஜேபியினர்.
குமரி அரசு மருத்துவ கல்லூரியில் தடுப்பூசி போடும் பிரிவில் இருக்கும் முதல்வர் படத்தை அகற்ற கூறி பாஜக வினர் வாக்குவாதம் செய்தனர்.

இந்தியாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குமரி மாவட்ட பாஜக சார்பில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் தெய்வசிகாமணிக்கு குமரிமாவட்ட பாஜகவினர் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர்.

இதே போன்று மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கியும் சால்வை அணிவித்தும் பாஜகவினர் நன்றி தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்கள் கொரோன தடுப்பூசி பிரிவினை சென்று பார்த்தபோது அங்கு மாநில அரசின் ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் புகைப்படங்கள் இருந்தன.

இதனை பார்த்த பாஜகவினர் இந்த திட்டமானது மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம், ஆகவே திமுக தலைவர்களின் புகைப்படங்களை அகற்றிவிட்டு பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என மருத்துவ கல்லூரி நிர்வாகிகளிடம் கூறினர்.

மேலும் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கோஷங்களையும் எழுப்பினர், இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!