4 மாநிலங்களில் ஆட்சி - தூய்மைப்பணி மேற்கொண்டு கொண்டாடிய பாஜகவினர்

4 மாநிலங்களில் ஆட்சி - தூய்மைப்பணி மேற்கொண்டு கொண்டாடிய பாஜகவினர்
X

தூய்மைப்பணி மேற்கொண்ட பாஜகவினர். 

குமரியில், அன்னதானம் வழங்கியும், தூய்மை பணி செய்தும், தேர்தல் வெற்றியை பாஜகவினர் கொண்டாடினர்.

வடமாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் தவிர மீதம் உள்ள உத்தரபிரதேசம், உத்திரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் மாமன்ற உறுப்பினரும், பாஜக மாவட்ட பொருளாளருமான மனம் முத்துராமன் தலைமையில் பாஜகவினர், மனவளர்ச்சி குன்றியோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கியும், தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!